Tuesday, 31 July 2018

நீ நான் நம்நினைவுகள் (Memories of Us)

கடற்கரை- நுரைக்கொண்ட அலை நம்
கால்களை முத்தமிட, கைகோர்த்து
கரையோரம் நாம் கால் பாதிக்க, இது
அலையில் களையக் கூடும் இந்நினைவல்ல.

பூங்கா- பல வண்ணப்  பூக்கள் பூத்துக் குலுங்க, பச்சை
பாய் போல் எங்கும் பறந்து விரிந்துகிடக்கும் புல்
அப்புல்லின் மீது நாம், என் தோள்மீதுத் தலைச் சாய்ந்து நீ
மட்டற்ற மகிழ்ச்சியில் நான்.

உணவகம்- கொஞ்சம் சூடான சுவையான உணவு
நிறைய நிறைவானப் பேச்சு உன்னோடு மற்றவை
அனைத்தும் இவ்வுலகில் உறைந்துப்போகும்
நம் உரையாடல் தவிர.

துணிக்கடை- ஆடை எடுக்கும் ஆசையில் நீ உன்னை
அணைக்கும் ஆசையில் நான்.

திரையரங்கம்- குளிரூட்டும் காற்றுக் குறைவான வெளிச்சம்
கண்கள் கதைப் பார்க்கக் கைகள் கதைப்பேசும்.

கோவில்- கண்காணாக் கடவுள் சன்னதியில் வீற்றிருக்க
கண்கண்ட தெய்வமாய் என் கண்ணெதிரே நீ.

வீடு- அன்பைக் கொண்டு அமைத்த நம் சொர்கம், இதில்
ஓவொரு இடத்திலும் நம் இன்பத்துன்பங்களை
எதிரொலிக்கும் நம் அழகு ஆலயம்.
                                                                                    - ASH

Sunday, 29 July 2018

உங்கள் அன்பு மகன்



                                                     ஒளி இன்றி நிழலில்லை,
                                                     நீங்கள் இன்றி நான் இல்லை
                                                     அம்மா உன் அன்பெனும்
                                                     நந்தவனத்தில் பூத்த ரோஜா நான்.
                                                     அந்த நந்தவனத்தை வேலியாக
                                                     பாதுகாப்பது என் அன்பிற்குரிய தந்தை.

ஆனந்த கண்ணீர் (Tears of Extreme Happiness)


வாழ்த்த வார்த்தை தேடினேன் வார்த்தையின்றி
வாயடைத்து நின்றேன் சட்டென்று என் சிந்தையில்
"வாழ்த்த வார்த்தை கிட்டாத அளவிற்கு புகழ்வாகை
சூட பிறந்தவன் நீ! "
"வார்த்தைகளும் சற்று மோதக்கூடும் உன்னை வாழ்த்தும்
வாக்கியத்தில் இடம் பெறவே!"
"வார்த்தைகளை வென்று கண்களை வாயிலாக கொண்டு
வழிந்த நீரே ஆனந்த கண்ணீர்."
ஆனந்த கண்ணீர், இது மொழியற்று விழி கொண்டு
பேரன்பின் உச்சத்தை விலகும் நிகழ்வாகும்.

Saturday, 28 July 2018

என் அன்பு தாய் ( My Lovable Mother)

தாய் உயிர் கொடுத்தவள்
தாய் உணவு ஊட்டியவள்
தாய் உறவை உரைத்தவள்
தாய் அன்பை பகிர்ந்தவள்
தாய் ஆசை துறந்தவள்
தாய் இமைபோல் பாதுகாத்தவள்
தாய் கண்டிப்பை காட்டியவள்
தாய் அனைத்தும் அறிந்தவள்
தாய் தன்னலமற்றவள்
அவள் எனக்கென்று ஓடாய்
தேய்ந்தவள், ஓயாமல் என்
நலனை கருத்துபவள்,
நான் முதலில் கண்டு சிரித்த
என் அழகு தாயவள்.
                                                - ASH

என் தாய் மொழி ( My Mother Tongue)


"தமிழ், என் தாய்மொழி மட்டுமல்ல
என் தாய் எனக்கு தாலாட்டு பாடிய மொழி"

"பழமையான மொழியா என்பதை நான் அறியேன்
என் உயிரோடு கலந்து என்னோடு வளர்ந்த மொழி
என் தாய்மொழி தமிழ் என்பதை நான் அறிவேன்."

"நான் நினைவற்ற போதும் என் மூளையின்
அணுக்கள் நினைவு கொண்டு உச்சரிக்கும்
ஒரு மொழி அதுவே தமிழ் என்கின்ற
என் தாய் மொழி "
                                   - ASH

Friday, 27 July 2018

என்னுள் ஒரு மாற்றம் ( Is she my women? )

குயிலின் இசையை அறிந்ததில்லை உன்
சிரிப்பின் ஓசையை கேட்கும்வரையில்.
மழையின் ஒலியை அறிந்தேன் உன்
கொலுசின் ஒலியை கேட்டபோது.
இடியின் ஒலிகூட என் செவிகளில்
வசை பாடவில்லை உன் வளையலின்
ஓசையினை நான் கேட்கும்போது.
அம்பு என் இதயத்தை தொலைத்த வலியை
உணர்தேன் உன் கண்கள் என்னை கண்டபோது.
உன்னோடு நான் உணர்த்த இம்மாற்றம் அது
என்னுள் ஏற்படுத்தியது ஒரு போராட்டம்
இவள்தானோ எனக்காக பிறந்த என் தேவதையோ?


I didn't listen to the cuckoo's music until,
I will hear the sound of your laugh.
I had been realized the rain sound when,
I'm listening to the music of your anklet.
when I'm listening to your bangles sound,
My ear can't hear the thunder's sound.
At the time of your eyes were watching me,
I'm feeling the pain of an arrow pierced in my heart.
I'm getting this kind of a weird feeling,
That makes a clash within my heart.
Is she the girl who born on earth for me?

உன் பதில் என் வழக்கை (My life is in your answer)


உயிர் வாழ்வதற்கு சுவாசிக்க வேண்டும்.
நான் ஒவ்வொரு கணமும் சுவாசிக்கிறேன்
மறுகணம் உன்னை நேசிப்பதற்காகவே.
அழகிய முத்தை எப்போதும் சிப்பியானது
தனக்குள் வைத்து பாதுகாக்கின்றது
அந்த முத்தாக நீ இருக்க, உன்னை
காக்கின்ற சிப்பியாக நான் இருப்பேன்.
நிழலும் உன்னை பிரியக்கூடும் இருள் சூழுமெனில்
அந்நிலையிலும் உன் நிழலாய் நான் நிற்பேன்.
நீ என் துணையானால், வாழ்க்கை துணையானால்?
                                                                                                        - ASH


To live we have to breath.
I'm breathing for every sec,
To love you and live with you.
An oyster always protect the pearl,
By keeping the pearl within it.
If you are a pearl, I will be an oyster.
Always I will protect you with my power.
Even your shadow will disappear,
If you are standing in the darkness,
I will be there for you even your shadow,
Can't make a stand with you.
If you give me a chance to be your life partner,
I will do my best of the best to keep you safe.

Thursday, 26 July 2018

அகத்தின் அழகே காதலுக்கு அடித்தளம்

உன் கண்களை கண்டு நான் காணாமல்போகவில்லை
உன் சிரிப்பை கண்டு என் நினைவு சிதைந்துபோகவில்லை
உன் மூக்கை கண்டு உன்னில் நான் மூழ்கிவிடவில்லை
உன் காதை கண்டு என் தேகம் கரைந்துபோகவில்லை
உன் உதட்டை கண்டு உயிரனுகள் உடைந்துபோகவில்லை
உன் பேச்சை கண்டு நான் பேச சிறிதும் தடுமாறவில்லை
ஏனோ தெரியவில்லை இது என்ன புதிர் என்று புரியவில்லை
அன்பு நிறைந்த உன் உள்ளத்தின் அழகை நான் கண்டேன் 
இவையாவும் என்னுள் நிகழ்வதை உணர்ந்தேன், பெண்னே
என் மனம் நிலைகுலைத்து செய்வதறியாது நின்றேன்.
                                                                                                                    - ASH

என் பார்வையில் நீ ( In my view you are)

அழகின் ஆலயமே அமுதின் கடலே
சூரியனின் சுடரே நிலவின் நகலே
வசந்தத்தின் வாசலே வாடாமலரின் வாசமே
சிற்பத்தின் உருவமே ஓவியத்தின் உயிரே
அன்பின் அடைக்கலமே பணிவின் பெட்டகமே
பெண்ணின் பிறப்பிடமே என்னுடைய மறுபாகமே!
                                                                                                          - ASH

In my view you are,
Temple of the beauty.
Elixir of the sea that, 
Makes me live long.
Blaze of the sun.
Counterfeit of the moon.
A threshold of the spring,
A smell of the non-wilt flower.
A figure of the sculpture.
The vitality of the portrait.
Reside of the pure love.
A casket of the humility.
Birthplace of the women and,
The better-half of mine and my life.

Wednesday, 25 July 2018

அன்பின் மகத்துவம் (Greatness of love)

பயம் என்று ஏதும் இல்லை அதை
நீ தைரியத்துடன் எதிர்கொள்ளும்போது.
சுமை என்று ஏதும் இல்லை அதை
நீ சுகமாக ஏற்றுக்கொள்ளும்போது.
முடிவென்று ஏதும் இல்லை அதை
நீ தொடக்கமாக நினைக்கும்போது.
நமக்கு அழிவென்பது ஏதும் இல்லை
நம் நினைவுகள் நம்மீது அன்புகொண்ட
உள்ளங்கள் இடையே நிலைக்கும்போது.

"வாருங்கள் நாம் அன்பை பகிர்ந்து
இவ்வுலகில் அழிவின்றி வாழ்வோம்."
                                                                                      - ASH

There is no fear if you will face it with guts.
There is no burden if you will accept it comfortably.
There is no end if you will see it as a beginning.
There is no death for you if you will live in people's heart.
So share the love and  lovable memories with others,
To live forever and ever as a legend in their heart.

விடை அறிய ஓர் விண்ணப்பம் ( I live to love you )

வண்ணத்து பூச்சியின் சிறகை கொடுப்பேன்- நீ பறக்கவே
மயிலின் அழகிய தோகையை கொடுப்பேன்- நீ நடனமிடவே
நிலவுக்கு அழகூட்டும் ஒளியை கொடுப்பேன்- நீ பிரகாசிக்கவே
மலையளவு மகிழ்ச்சியினை கொடுப்பேன்- நீ சிரித்திடவே
பனி துளியின் இனிமையை கொடுப்பேன்- நீ சிலிர்த்திடவே
சூரியனின் கதக்கதபை கொடுப்பேன்- நீ குளிரின்மைபெறவே
இவையாவும் உனக்கென்று நான் கொடுக்க என் உயிரே
மென்மையான உன் கைகளை என் கையில் கொடுப்பாயா?
பிறர் கண்டு வியக்க என்னோடு கைகோர்த்து நடப்பாயா?                                                                         - ASH

I will give you the butterfly's wing for you to fly.
I will give you the peacock's plume for you to dance.
I will give you the moon's light for you to shine.
I will give you the Mtn's height happiness for you to smile.
I will give you the dew's pleasantness for you to quiver.
I will give you the sun's warmer for you to feel comfortable.
To give all of this to you and for you only, my dear,
Can you give your softest hands to the hands of mine
Can you walk by holding my hands to make a new love story?

Mnt's - Mountains


Tuesday, 24 July 2018

இரத்த பந்தம் ( My siblings )

உனக்கு பின் இவ்வுலகை கண்டேன்
உன் விரல் பிடித்தே நான் நடந்தேன்
சிறுச்சிறு சண்டைகள் நம் உறவுக்கு
அவை அழகான நினைவுகள் ஆகும்
தன்னலம் இன்றி நம்நலம் என்றே
கருத கோரியது நம் உறவானது
உணர்வை பகிர்வோம் உன்னத
உடன்பிறப்பு உறவை வளர்ப்போம்.
                                                                         - ASH

நீ என்னோடு பகிர்ந்துகொண்ட
அறையை வேறு எவராலும்
பகிர்ந்து கொள்ள முடியாது
ஆம் உடன்பிறப்பே அது நம்
அன்னையின் கருவறையே,
இரட்டையர்களின் பெருமிதம்.
                                                                         - ASH


I've seen this beautiful world after you.
I started to walk by holding your hand.
You see small fights in our relationship,
It is one of the beautiful memories of us.
We should act for common goodness,
Instead of the selfishness is our lesson,
We were learned this from our relationship.
We will share our feelings between us,
And so develop our brotherhood relationship. 

Monday, 23 July 2018

உனக்காக காத்திருப்பேன் (Waiting for you )

மலர்களும் உன்னிடம் மன்றாடும்
உன் கூந்தலில் இடம்பெற,
வளையலும் வளைந்து கொடுக்கும்
உன் கைகளில் அவை அசைந்தாட,
கொலுசும் சத்தம்மிடுகின்றதடி அவற்றை
நீ கால்களில் அணிந்துக்கொள்ளவே,
இவையாவும் உன்னை சேர்ந்திட உன்
கரம் என்று என் கரம் சேரும் என்றே?
காத்திருக்கும் உன்னை என்றும்
காதலிக்கும் ஓர் இதயம், அன்பே!.
                                                                         - ASH

Flowers also implored to you,

To get a place in your tress

Bangles also yielding to you,

To make a dance in your hand

Anklet also makes the sound to you,

To make you wear it.

All these are somehow reached you.

Likewise, I'm waiting for the time that

your hand is going to reach my hand.

By thinking of that time a heart is waiting,

For your arrival with full of love.

தேய்கின்ற நிலவு நம் முதல் உறவு ( Our real hero )

நாங்கள் சுவாசிக்க மறந்தாலும் கண்ணே
உன்னை நேசிக்க மறக்கமாட்டோம்.
நாங்கள் உணவு உண்ண மறந்தாலும்
உனக்காக உழைக்க மறக்கமாட்டோம்.
கண்ணே நீ எங்களை மறந்தாலும் நாங்கள்
இறைவனிடம் மன்றாட மறக்கமாட்டோம்
நீ நோய்நொடி இன்றி மகிழ்ச்சியாக இருக்க.

பெற்றோர் இருக்கும் இடமே பிள்ளைகளின் மடமாகும்
நம்மனதின் கவலைகளை போகும் இடமாகும்.
                                                                                                   - ASH

Even though we forget to breath
My dear, we won't forget to love you
Even though we forget to eat the food
We won't forget to work for you to eat
My dear even though you forget about us
We won't forget to pray for you
To the god to keep you healthy

A place where parents live is the temple for children
That's the place where we are able to rid all problems
And reached the state of peace in heart.

Keep parents next to you and so you will be happy
If you deny it then you have to die to regret
For your heartless action towards your parents.

Sunday, 22 July 2018

பெண்ணின் பேரின்பம்

பெண் அவள் பெற்ற குழந்தையை
முதலில் கைகளில் பெறும்போது
கொண்ட பேரின்பம், வார்த்தைகளை
கொண்டு வடித்தெடுக்க முடியாதவை
அவள் மனதில் மலர்ந்த எண்ணங்கள்
"பெண்ணாக இம்மண்ணில் பிறந்து
நான் பெற்ற இன்பங்களில் பேரின்பம்
உன்னை பத்துமாதம் பேணிக்காத்து
பெற்றதே என் செல்வம், என்று விழியில்
வழியும் நீர் அதுவே மகிழ்ச்சியின் உட்ச்சம்."
                                                                                        - ASH


Saturday, 21 July 2018

உருகும் உள்ளம்

என் மூச்சு உள்ளவரை உன்னைப் பற்றிய பேச்சு இருக்கும் 
என் சுவாசம் உள்ளவரை உன்மீது நேசம் இருக்கும் 
என் இதயத்துடிப்பு உள்ளவரை உன்னினைப்பு இருக்கும் 
இருக்கும் இருக்கும் அம்மா என் காலம் உள்ளவரை 
என் உயிர் உன் கால்களுக்கு காலணியாகவே இருக்கும் 
இப்படிக்கு உன் நினைவில் உருகும் உன் பிள்ளை
                                                                                                          - ASH

என் மனதின் மனு ( A message of Heart beat )


கண்ணாடி நம் உருவத்தைப் பிரதிபலிக்கும்
ஆனால் ஏனென்று புரியவில்லை அழகே
உன்னை நான் கண்ட நாள் முதல் அது
என் உள்ளதைப் பிரதிபலிக்கின்றது
அதில் உன் உருவமே தெரிகின்றது .
சற்று நொடியில் உன் உருவம் மறைகின்றது
என் முகத்தில் சிரிப்பு மலர்கின்றது
உள்ளம் அதை நினைத்து மகிழ்கின்றது
உன் மீதான அன்பு துளிர்த்து எழுகின்றது
உன்னை நாடி என் அன்பைக் காட்டச் சொல்கின்றது.
                                                                                                           - ASH

A mirror is the one which reflects our image
But I don't know why, a day after I seen you
It reflects the image of my heart in that
I seen your image only, in a few seconds
Your image was disappeared, by thinking of it
A bright smile bloomed in the face of mine
Because of this my heart gets flutter feeling
A spark in my mind tells me to approach you
To show my love for you that sprout in my heart.

Friday, 20 July 2018

ஒரு தாயின் உள்ளம்

கண்ணே நான் கணவனின் கரம் பற்றியே
புகுந்த வீட்டில் கால் பதித்தேன்
காலங்கள் கடக்க வேண்டாத தெய்வமில்லை
காணாத மருத்துவ வழிகளில்லை
சுற்றமும் சொந்தமும் என் இதயத்தை ஈட்டி
சொற்களைக் கொடு காயப்படுத்த
இக்கவலை என்னை இருளில் மூழ்கச்செய்ய
என்னுள்ளம் உயிர்துறக்கச் சொல்ல
இறைவன் தந்த ஒளியாக என் கருவில் ஜனித்து
என்னை உயிர்த்தெளியச் செய்தாய்
பிறர் நலன் கருதா நல்ல உள்ளம் கொண்ட நம்
சுற்றமும் சொந்தமும் வாயடைத்து
வாழ்த்துக்கோரச் செய்தாய், என் செல்வமே இனி
உன்னை நேசிக்கவே இவ்வுயிர் சுவாசிக்கும்.
                                                                                                   - ASH

உன்னை சேரவே இம்மண்மீது நான் ( My life is mean to reach you )

இவ்வுலகம் உறைய கண்டேனடி உன்
கருவிழிகள் என்னை கண்டக்கணமே!
என்னுள்ளம் உறைந்துடைய உணர்தேனடி உன்
செவ்விதழ்கள் என்னை கண்டு புன்னகைத்த மறுகணமே!
உன்னிடத்தில் காதலை உரைப்பேனோ! அல்லது
காற்றோடு கரைந்து உன் சுவாசத்தில் இணைவேனோ!
                                                                                                                   - ASH


I seen this world was frozen without any movement
At the moment I seen your black shaded iris eyes
I feel that my heart has been frozen to break
At the moment your cherry lips smile at me
whether I will propose my love to you or
I will mingled with your breath by dissolved in air.

Thursday, 19 July 2018

அழகின் முன்னுரையும் முடியுறையும் இவள்தான்


கயல்விழி கண்களை கொண்டு
என்னை காயப்படுத்தியவள்.
செவ்விதழ் சிரிப்பை கொண்டு
என்னை சிறையெடுத்தவள்.
அருவி போன்ற சீகையை கொண்டு
என்னை சிக்கவைத்தவள்.
மிளகாய் போன்ற மூக்கை கொண்டு
என்னை மூச்சடைக்கச்செய்தவள்.
கேள்விக்குறி போன்ற காதை கொண்டு
என்னை கதறவைத்தவள்.
மொத்தத்தில் அழகை காட்டி என்னை
அவள் பின்னே அலையவைத்தவள்.
என் அன்பிற்குரியவள்.
                                           - ASH

இளகிய இதயம் ( Heart of the Beast )

உனக்காக உயிர் துறந்தேன் 
என்னைக் கண்டு உன் உள்ளம் 
கலங்க நீ சிந்திய ஒரு துளி 
கண்ணீர் போதும் எனக்கு.
இதுவே இம்மிருகப் பிறவியின் 
பயன் என்றே என் முகத்தில் 
புன்னகைக் கொண்டு நான் 
கண்களை மூடுவேன், அன்பே 
நான் மனிதனாய் இம்மண்ணில் 
மீண்டும் பிறக்க ஆசை, அழகே 
உன் கைகளைப் பிடிக்க ஒரு
வாய்ப்புக் கிடைக்குமெனில்.
                                                             - ASH


I was died for you.
Your heart feels bad by looking at me
If you are teared a single drop from your eyes
That's enough for me in this beast birth
I will close my eyes with a smiling face
I wish to reborn as a human in case,
There is a chance to hold your hand.

Wednesday, 18 July 2018

தாயின் உள்ளம் (Mother's Heart )


என்னை மறந்து உன் அருகில் இருப்பேன்
கண்ணே! நீ உறங்கும் அழகை காணவே
என் தாய் உள்ளத்தின் முழக்கம் இது.
அக்கணம் என்னை விட்டு தள்ளியிருந்தால்
அவள் உள்ளம் நிம்மதியின்றி தவிக்கும்
என் உறக்கம் கலைந்துவிடுமோ என்றே.
                                                                                        - ASH


When I'm next to you, I shall forget myself
And watching you while you are sleeping
It's the words revolve in the mind of my mom.
At the moment while the infant sleeping
If the mother is not next to their infant
The mother's heart won't be in peace
And then she feels uneasiness in her heart
Because following words eats her mind
What shall i do? what shall i do?
If her infant sleep gets disturbed means.


Tuesday, 17 July 2018

உணவின் உயிர் விவசாயம் ( Food and Farmers)

மனிதா!
இயற்கையை அழிக்காதே
விவசாயியை ஒழிக்காதே
உயிர் வாழ உணவுத்தேவை
இதை நீ என்றும் மறக்காதே
அரசே!
உழவர்களின் வேண்டுகோளை
ஒருபோதும் மறுக்காதே
உன் மதியை இழக்காதே
மக்களை வதைக்காதே
இன்று சிந்திக்க மறந்தால்
நாளை என்றொன்று இல்லை.
                                                                  - ASH


Oh humans!
Don't destroy the nature
Don't eradicate the farmers
To live we need food
You don't forget it
Oh government!
Don't deny farmers
And their basic request
Don't loose your brain
Don't kill the people
By taking the wrong decision
Food can't be manufactured
It can be produced only by cultivation
That can be done only by farmers
If you don't think today then
There is no tomorrow for all of us

கனவோ என்றெண்ணிய நிஜம் ( Sweet Scenario )

இருளில் நிலவின் ஒளிக்கொண்டு பிரகாசிக்கும்
நட்சத்திரம் மண்ணில் நடந்துவந்ததோ என்றே
திகைத்து நின்றேன், அழகியே நீ இருளில்
விளக்கை கைகளில் ஏந்தி புன்னகையோடு
வருகின்ற காட்சியை காணும்போது.
                                                                            - ASH

In darkness the stars glitter in the moon light
I shocked and stunned  to see that the star
Which fall down and walked towards me
It looks like the same way that I imagined
you carried a lighted lamp in your hand
And walked towards me with a smile
In the darkness, this scene pierced through
My heart with a love arrow from your eyes

Monday, 16 July 2018

உனக்காக நான் (I'm for you)

நான் காற்றோடு கரைந்தாலும் நீ
சுவாசிக்கும்  காற்றாக இருப்பேன்.
நான் மண்ணோடு மறைந்தாலும் உன்
பாதம் தாங்கும் மண்ணாய் இருப்பேன்.
என் நினைவு உன்னை தொடரும்வரை
உன் நிழலாய் நான் இருப்பேன்.
நீ என்னை மறந்தாலும் அன்பே நான்
உன்னை பாதுகாக்க மறவரின்.
                                                                - ASH

Even though I'm turned into the air 
I will be the air that you are respired to live
Even though I'm fade away in the sand
I will be the sand that support your feet to walk
Until my remembrance follows you
I will be with you as your shadow
Even though you forget me by time, oh my dear!
I won't forget to protect you.

Saturday, 14 July 2018

காதலிக்கு ரோஜா (Rose to propose)

"அனைவரையும் ஈர்க்கும் ரோஜா பூவிற்கு
முட்கள் பாதுகாப்பாக இருக்கின்றது.
அந்த அழகிய ரோஜாவாக நீ இருக்க
நான் முட்களாக இருந்து என்றும்
உன்னை பாதுகாக்க சம்மதமா?"

ஒருவேளை ரோஜாவை கொண்டு காதலை
வெளிப்படுத்துவதற்கு காரணம் இதுதானோ?
                                                                                            - ASH

For the rose which attracts all
Thorns on stem is used to protect it 
If you are like that beautiful rose
Can I get a chance to be the thorns? 
To protect you for rest of my life


Oh! To say this, All persons give rose with thorns on stem to propose their lover ah?

Friday, 13 July 2018

என்னுள் ஒரு மாற்றம்

இரு கைகளை கொண்டு நீ
என்னை கட்டி அணைக்கும்
அத்தருணம் எனக்குள் ஒரு
வேதியல் மாற்றம் அது என்
உடலின் வெட்பத்தை கூட்டும்
இதயத்தின் துடிப்பை அதிகரிக்கும்
மூளையின் செயல் சம்பித்துபோகும்
உடலின் அணுக்கள் அதிர்த்துப்போகும்
இம்மாற்றம் என் மகிழ்ச்சியின் தோற்றம்.
"அன்பே இது உன்னோடு மட்டும்
இதில் இல்லை ஒரு மாற்றம்"
                                                                - ASH

Thursday, 12 July 2018

ஒரு சுகமான சூழல் உன்னோடு


இருள் அனுமதி கேட்க
ஒளி விடைதரும் மாலைநேரம்
ஈரம் சுமந்த இனிமையான காற்று
வானெங்கும் கார்மேகம் சூழ்ந்திருக்க
மின்னல் எட்டி பார்த்து செல்ல
இடைவிடா அலையின் ஓசை 
மஞ்சள் நிறச்சக்கரை போல் மணல்
என் அருகில் நீ! உன் அருகில் நான்!
கை கோர்த்து கண்கள் காதல் பேச
மழையும் வரும் நம்மை மகிழ்விக்க
மடிந்தாலும் மறையாது இந்நினைவானது
என் மனதில் என்றென்றும் நிலையானது
                                       - ASH

காலத்தை கடந்தது காதல் ( About Time - Part II )

என் ஆயுள் காலம் குறைந்தாலும் அன்பே
உன் அருகில் இருக்கவே ஆசை கொன்டேன்.
நீ என்னை விலகிச்சென்ற போதும் அன்பே
நான் உன்னை விரும்பி நெருங்கி வந்தேன்.
உன்னை மீட்டு கொண்டுவர மரணத்தின்
வாசலென்றாலும் நான் வருவேன் உனக்காக.
உன்னை நெருங்கிய மரணமும் நம் காதலை
கண்டு காணாமல் போனது, என் கண்னே.
இனி இனிதே என்று நம் வாழ்வில் இணைவோம்.
                                                                                                        - ASH

My dear even though my life time decreases
I'm always desired to stay near to you
My dear even though you run away
I'm always liked to get close to you
I will come for you to get you back
even though it is entrance to the death
After seen our love for each other
Death which tries to reach you is also gone 
And so we have to live together happily
Forever and ever in our life time 

Wednesday, 11 July 2018

Life's Lesson

To taste a win face a loss.

To taste a truth face a lie.

To taste a delightfulness face a bitterness.

To taste a cheer face a depression

Because of this, hard time will turn to good and won’t get bad again because you already know the magic to overcome such a hard time

Tuesday, 10 July 2018

உயிருள்ள ஓவியம் ( Alive Art )


நீரில் நனைந்த ஓவியம்
அழியுமா? அழகாகுமா?
.
.
.
.
மிகவும் அழகாகும், ஆம்
என்னவளே உயிர் கொண்ட
என் ஓவியம்.
                                                              - ASH


When drenched in water,
Whether Painting will get erased or exquisite?
.
.
.
It became more beautiful, yes
My girlfriend is the alive painting
Done by the god, to get in my hand.

Monday, 9 July 2018

மரங்களின் பரிசு (A gift of trees)

மழையின் ஓசை- அது நம்மனதை
மகிழ்விக்கும் இயற்கையின் இசை.
எனவே மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
அதன் மூலம் இயற்கையின் இசையை பெறுவோம்.
                                                                                                  - ASH

Raining sound is the nature's music
It will make our heart to feel pleasure
So we will grew the trees to get the rain
By doing so, we get the nature's pleasant music.

முயன்றாலும் முடியாது (No easy to separate)


இருவர் உள்ளத்தால் ஒன்றாக
இணைந்து விட்டால்.
வெள்ளத்தால் கூட அடித்து
பிரித்து செல்லமுடியாது.
பிரிந்தால் இருவர் கண்களும்
சிறுகணமும் துயில்கொள்ளது.
இதை சொன்னால் புரியாது 
புரிந்துகொண்டால் உறவு உடையாது.
                                                                                 - ASH


If two persons become a one by heart
Even flood can't be separate them apart
If they are separated their eyes won't sleep
Even for a second until they reached by their hands
It is not easy to understand this feeling by words
If you understand this feel then relationships won't be broken.

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)