Friday, 20 July 2018

ஒரு தாயின் உள்ளம்

கண்ணே நான் கணவனின் கரம் பற்றியே
புகுந்த வீட்டில் கால் பதித்தேன்
காலங்கள் கடக்க வேண்டாத தெய்வமில்லை
காணாத மருத்துவ வழிகளில்லை
சுற்றமும் சொந்தமும் என் இதயத்தை ஈட்டி
சொற்களைக் கொடு காயப்படுத்த
இக்கவலை என்னை இருளில் மூழ்கச்செய்ய
என்னுள்ளம் உயிர்துறக்கச் சொல்ல
இறைவன் தந்த ஒளியாக என் கருவில் ஜனித்து
என்னை உயிர்த்தெளியச் செய்தாய்
பிறர் நலன் கருதா நல்ல உள்ளம் கொண்ட நம்
சுற்றமும் சொந்தமும் வாயடைத்து
வாழ்த்துக்கோரச் செய்தாய், என் செல்வமே இனி
உன்னை நேசிக்கவே இவ்வுயிர் சுவாசிக்கும்.
                                                                                                   - ASH

1 comment:

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)