Tuesday 31 July 2018

நீ நான் நம்நினைவுகள் (Memories of Us)

கடற்கரை- நுரைக்கொண்ட அலை நம்
கால்களை முத்தமிட, கைகோர்த்து
கரையோரம் நாம் கால் பாதிக்க, இது
அலையில் களையக் கூடும் இந்நினைவல்ல.

பூங்கா- பல வண்ணப்  பூக்கள் பூத்துக் குலுங்க, பச்சை
பாய் போல் எங்கும் பறந்து விரிந்துகிடக்கும் புல்
அப்புல்லின் மீது நாம், என் தோள்மீதுத் தலைச் சாய்ந்து நீ
மட்டற்ற மகிழ்ச்சியில் நான்.

உணவகம்- கொஞ்சம் சூடான சுவையான உணவு
நிறைய நிறைவானப் பேச்சு உன்னோடு மற்றவை
அனைத்தும் இவ்வுலகில் உறைந்துப்போகும்
நம் உரையாடல் தவிர.

துணிக்கடை- ஆடை எடுக்கும் ஆசையில் நீ உன்னை
அணைக்கும் ஆசையில் நான்.

திரையரங்கம்- குளிரூட்டும் காற்றுக் குறைவான வெளிச்சம்
கண்கள் கதைப் பார்க்கக் கைகள் கதைப்பேசும்.

கோவில்- கண்காணாக் கடவுள் சன்னதியில் வீற்றிருக்க
கண்கண்ட தெய்வமாய் என் கண்ணெதிரே நீ.

வீடு- அன்பைக் கொண்டு அமைத்த நம் சொர்கம், இதில்
ஓவொரு இடத்திலும் நம் இன்பத்துன்பங்களை
எதிரொலிக்கும் நம் அழகு ஆலயம்.
                                                                                    - ASH

1 comment:

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)