இருள் அனுமதி கேட்க
ஒளி விடைதரும் மாலைநேரம்
ஈரம் சுமந்த இனிமையான காற்று
வானெங்கும் கார்மேகம் சூழ்ந்திருக்க
மின்னல் எட்டி பார்த்து செல்ல
இடைவிடா அலையின் ஓசை
மஞ்சள் நிறச்சக்கரை போல் மணல்
என் அருகில் நீ! உன் அருகில் நான்!
கை கோர்த்து கண்கள் காதல் பேச
மழையும் வரும் நம்மை மகிழ்விக்க
மடிந்தாலும் மறையாது இந் நினைவானது
என் மனதில் என்றென்றும் நிலையானது
- ASH
- ASH
Super words dude...by திLIP
ReplyDeleteNandri pal
ReplyDelete