என் கனவுக்கன்னி நீயென உணர்தேன்.
உன் செவ்விதழினை நினைத்தேன்
என் தூக்கத்தைத் தொலைத்தேன்.
உன் நீண்டக் கூந்தலை நினைத்தேன்
கருநிற அருவியோ எனத் திகைத்தேன்.
உன் கம்மலிட்டக் காதுகளை நினைத்தேன்
என் ஆசையை உரைத்திடத் துணிந்தேன்.
மொத்தத்தில் நீ சேலை அணிந்து வந்த
என் தேவதை என்பதை நான் அறிந்தேன்.
உன் அழகின் நினைவு என்னைத் தட்டி எழுப்ப
என் கைகளில் காகிதமும் எழுதுகோலும் எடுக்க
உந்தன் அழகினைக் கவிதையாக நான் வடித்தேன்.
- ASH
No comments:
Post a Comment