Thursday, 19 July 2018

அழகின் முன்னுரையும் முடியுறையும் இவள்தான்


கயல்விழி கண்களை கொண்டு
என்னை காயப்படுத்தியவள்.
செவ்விதழ் சிரிப்பை கொண்டு
என்னை சிறையெடுத்தவள்.
அருவி போன்ற சீகையை கொண்டு
என்னை சிக்கவைத்தவள்.
மிளகாய் போன்ற மூக்கை கொண்டு
என்னை மூச்சடைக்கச்செய்தவள்.
கேள்விக்குறி போன்ற காதை கொண்டு
என்னை கதறவைத்தவள்.
மொத்தத்தில் அழகை காட்டி என்னை
அவள் பின்னே அலையவைத்தவள்.
என் அன்பிற்குரியவள்.
                                           - ASH

1 comment:

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)