Saturday, 30 June 2018

Make you live by any chance even after life.


நான் மண்ணோடு புதைந்தாலும்
என் அன்பும் அரவணைப்பும் காற்றாகி 
உன்னை என்றும் வாழவைக்கும் 
கலங்காதே உன்னில் நான் இருக்கேன் வருந்தாதே.
                                                                                              - ASH

Even I'm buried under the ground
My love and care turn into an air
And make you to live for longtime
so don't cry, I'm always within you.


Friday, 29 June 2018

காதலின் ஆழம் (Depth of Love)

மண்ணில் பதிந்த உன் சுவடுகள் காலத்தால் மறையக்கூடும்
ஆனால் என் மனதில் பதிந்த உன் சுவடுகள் மறையாது
காலத்தால் அதன் அழுத்தம் அதிகரித்து கொன்டே போகும்.
அதுவே உன் மீதான என் காதலின் ஆழம் ஆகும் அன்பே.
                                                                                                                        - ASH

Yours foot step on sand gone by time but
Yours foot step in my heart won't fade away
Instead by time it's impression gets deeper
That's the depth of my love to you dear.

Magic Girl


நான் கற்க மறந்த கலை காதல் அதை
கற்பிக்க பிறந்தவளை காணும்வரையிலே.

கண் மூடித்திறகும் கணம் எதிரே தோன்றினால்
நான் கண்சிமிட்ட மறுத்தேன் எங்கே அவள்
காற்றோடு கரைந்து போவாளோ என்றே!
                                      - ASH

MY Heart Beat Says.......


என் மனதின் தேவதையை பிரதிபலித்த
கண்ணாடி நீ!
என் மனதை அக்கணமே கவர்ந்து சென்ற
கள்ளியடி நீ!
என் கண்ணெதிரே தோன்றி மறையும்
மின்னலடி நீ!
என் இரவை ஒளியூட்டி அழகாகும்
மின்மினி நீ!
என் மனம் உன்னிடம் சொல்லச்சொன்னது 
என் விடியல் உன் பதிலில் உள்ளது என்றே.

                                                                                         - ASH

Thursday, 28 June 2018

ஆயுள் நேரமும் காதலும் ( About Time - Part I)

உன்னோடு இருப்பின்
என் ஆயில் கூடியது
என் மீதான உன் காதல்.
உன் ஆயில் குறைய
என் ஆயில் கூடுகின்றது
என்றறிந்து உன்னைப் பிரிந்தேன்
உன் மீதான என் காதல்.
காலமும் தோற்றுப்போகும்
காதலைப் பிரிக்க நினைப்பின்.
நேரமும் உறைந்துப்போகும்

அன்பே! என்னோடு நீ இருப்பின்.
                                                                     - ASH

MY NIECE


என் குடும்பம் என்ற மரத்தில்
புதிதாய் பூத்த அரும்பு மலர்
என் அண்ணன் மகள் "வருணிகா".

மழலை நிலவை கைகளில் ஏந்தினேன்
நிழலும் மண்ணில் விழாமல் தாங்கினேன்
தாலாட்டி தட்டித்தட்டி துயிலுற செய்தேன்
துயிலுறும் அழகை மெய்மறந்து கண்டேன்
மகிழ்ச்சியில் நான் மடியில் என் அண்ணன் மகள். 
                                                                                                              - ASH  

Exquisite evening.

மாலை நேர மஞ்சள் வெயில்
உன்னை தங்கம்போல் ஜொலிக்க  செய்யுதடி.
ஐயோ! அக்காட்சி என் மனதை
அணுவணுவாய் கொள்ளுதடி.
இதை சொல்ல நினைத்து என்
மனம் தவிக்குதடி தத்தளிக்குதடி.
                                                                     - ASH

Wednesday, 27 June 2018

எந்திரம் என்ற போதும் என் காதலி நீ (I'm not a robot, Kdrama)


மனிதர்கள் மீது நம்பிக்கை அற்று
தனிமை குடிகொண்ட என் வாழ்வில்
எந்திரமாய் வருகை தந்தாள் பெண்.
என் மருந்தாய் மனதில் மாயம்செய்தால்.
இனிமையான பேச்சால் தனிமை தகன்றது.
காதலில் விழுந்தேன் இயந்திரம் என்றபோதும்.
மூளை மறுக்க மனம் அதை ஏற்கமறுகின்றது.
"அவள் எந்திரம் அல்ல என்றறிந்து
அவள் கைகளை என் கைகள் பற்றுமா?"
                                                                                        - ASH

திருமணத்திற்கு பின் (After Marriage)


இனி
கனவுகள் கலைந்தாலும்
என் கண்முன்னே
நீ.

இனி
இரவு முடிவதும்
விடியல் தொடங்குவதும்
ஈர இசையான உன்
முத்தத்தோடு.
                       - ASH


மரமும் மனிதனும்


மண்ணில் விழுந்த விதை யாவும் 
மரமாய் வளர்வதில்லை. 
மரமாய் வளர்ந்த யாவும் பயனற்று 
மறைந்துப் போனதில்லை. 
மனிதன் வளர்த்த மரமாவதும் அல்லது 
மக்கிய விதையாவதும் அவன் உள்ளத்தின் 
எண்ணத்தில் உள்ளது. 
எனவே 
"விதை விதைப்போம் மனதில்
நல்லெண்ணத்தை விதைப்போம் 
மரம் வளர்ப்போம் சமூகத்தில் 
நன் மக்களாய் வளர்வோம்."
                                                               - ASH

Tuesday, 26 June 2018

You and I with Cup of Coffee


மேஜையின் மீது சூடாக இருப்பவை
இரண்டு ஒன்று காபி மற்றொன்று நீ!

கேள்விக்கு விடையறியேன்.
என்னவென்றால்,
காபி இனிக்கின்றதா அல்லது
நீ காபி பருகும் காட்சி இனிக்கிறதா?
                                                                           - ASH


என்னை தாலாட்டிய தாய்


உன் உருவம் என் உள்ளத்தில்
உறைந்து சிற்பமாக நிற்கின்றது.
உன் சிரிப்பு என் உள்ளத்தில்
இன்றும் சிதையாமல் ஒளிகின்றது.
உன்னுடன் நான் இருந்த நினைவுகள்
கல்மீது செதுக்கிய எழுதுபோன்றது
என்றும் என் நெஞ்சில் அழியாதிருக்கும்.
நீ இன்று என்னுடன் இல்லை, உன் 
நினைவோ என்னை விட்டு அழியவில்லை.
என்றும் உன் நினைவில் வாழும் உன் அன்பு மகன்.
                                                                                                  - ASH

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)