என் குடும்பம் என்ற மரத்தில்
புதிதாய் பூத்த அரும்பு மலர்
என் அண்ணன் மகள் "வருணிகா".
மழலை நிலவை கைகளில் ஏந்தினேன்
நிழலும் மண்ணில் விழாமல் தாங்கினேன்
தாலாட்டி தட்டித்தட்டி துயிலுற
செய்தேன்
துயிலுறும் அழகை மெய்மறந்து
கண்டேன்
மகிழ்ச்சியில் நான் மடியில்
என் அண்ணன் மகள்.
- ASH
No comments:
Post a Comment