Tuesday, 21 August 2018

மயக்கத்தால் உண்டான தயக்கம்

என் உள்ளத்தை உன்னிடம் உரைக்க எண்ணி
உன் முன் வார்த்தை வராமல் உளறிக்கொட்ட
இணைபுரியாத் தயக்கம் என்னுள் தாண்டவமாட
உன் கண்களோ என்னை ஆவலோடு எதிர்நோக்க
என் உள்ளத்தின் துடிப்போ அதன் வேகத்தை மிஞ்சிவிட
தைரியத்தைத் தரக்கோரி இறைவனை நான் வேண்ட
குரலில் ஒரு நடுக்கம் இருப்பினும் சொல்லத் துடிக்கும்
என் உள்ளம் "நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றே!"
உரைக்க எண்ணியதை உன்னிடம் உரைப்பேனோ
அல்லது உரைக்காமல் உள்ளம் நோகத் துடிப்பேனோ.
                                                                                                               - ASH

Thursday, 16 August 2018

உன் நினைவு போதும் நான் வாழ்ந்துவிடுவேன்

என் கணவாய் இருந்தவள்.
கணப்பொழுதில் களைந்தவள்.
கண்ணீர் துளியில் நிறைந்தவள்.
நித்தமும் என்னைக் கொள்பவள்.
என் மெய்யில் நிறைந்த பொய் என்றானவள்.
நிஜம் இல்லை என்றபோதும் நினைவொன்றே
போதும் போதும் என்றென்னும் என் மனம்
ஒன்றே எனக்குப் போதும் என் அன்பே.
                                                                                      - ASH

Wednesday, 15 August 2018

காதல் என் பார்வையில்

காதல், இருள் நிறைத்த வாழ்வில்
ஒளி பொருந்திய முழு நிலவு, அது
நாளடைவில் தேய்ந்தாலும் மீண்டும் வளரக்கூடியது,
பொறுமையும் நம்பிக்கையுமே அதற்குத் தலைமையானது.
காதல், இருவர் மட்டும் வாழும் கனவு
உலகிற்க்கான நுழைவுச் சீட்டு.
காதல், ஈர் இதயத்தை இணைக்கும்
கண்கள் காணா வண்ணம் வரைந்த பாலம்.
காதல், இன்பத்தையும் துயரத்தையும்
அளவின்றி அள்ளி வழங்கும் கருவூலம்.
காதல், கண்களால் பேசச் செய்யும்
தந்திரத்தைப் புகட்டும் மந்திர எழுத்து.
காதல், உன்னில் என்னைக் கரையச் செய்யும்,
எண்ணில் உன்னை ஒளியச் செய்யும் ஒரு விந்தை.
காதல், இரு இதயம் மட்டுமே
உரையாட கூடும் அலைவரிசை
இடையூறு இதற்கு இல்லை.
காதல், இருயிர் இணைய அவற்றின்
உணர்வையே உணவாக கொண்டு
வளரும் சிம்பையொட்டிக்.

உன்னிடம் பேச என்னும் என் இதயம்

 நான் கற்க மறந்த கலைக் காதல்
அதைக் கற்பிக்கப் பிறந்தவளை
காணும்வரையிலே.

என் வாழ்க்கையின் கேள்விக்கு
விடையாக நீ இருக்க, அன்பே
உன் விருப்பம் கோரி வினாவாக,
உன் முன் நான்.

நிறைவற்ற விருப்பங்கல்லொடு நிறைவடைந்த வாழ்க்கையாகும்
நான் உன்னைக் காணாதிருப்பின், என் வாழ்வை நிறைவடைய
செய்வாயா உன் மனதை என்னிடம் தருவாயா.....?
                                                                                                                  - ASH


Thursday, 9 August 2018

மண்மீது பெண்ணாக நிலா ( Moon on the Earth )

இரவு நேரம் குலத்தடி ஓரம்
அலையாத நீர் அமைதியான சூழல்
நீரில் அழகிய வட்ட நிலவின் தோற்றம்
சட்டென்று திகைத்துப் போனேன் நான்
வானில் ஒரு நிலவு இருக்க ஏனோ
புரியவில்லை நீரில் நான் கண்டதோ
இரு நிலவு, விண்ணில் உள்ள நிலவின்
ஒளியில் ஒளிகொண்டு பிரகாசித்த
மறு நிலவு மண் மீது உயிர் கொண்டு
உலாவித்திரியும் பெண்ணிலவு நீ அன்றோ?
என் அழகுக் காதலி நீ அன்றோ? அன்பே.
                                                                                    - ASH

Tuesday, 7 August 2018

உன் வருகை நோக்கும் முதிர்ந்த கண்கள் (Heart of Grandparents)

கையை ஊன்றிக் கவிழ்ந்து தவழ்ந்த
பிள்ளை நிலா அவள்.
முட்டிப் போட்டு முன்னேறி வந்த
முல்லைப் பூ அவள்.
தட்டித்தட்டித் தடுமாறி நடந்து வந்த
தங்கத் தேர் அவள்.
கண்களைச் சுருக்கிப் புன்னகைச் செய்த
பளிங்குச் சிலை அவள்.
சுட்டித்தனமும் சேட்டைகளும் அவளிடம்
கொட்டிக்கிடக்கும் ஏராளம்.
தொட்டுத் தூக்கிக் கொஞ்சும் ஆசையில்
ஏக்கம் கொண்டது எங்கள் உள்ளம். 


அவள் வருகை நோக்கி வாசலைப் பார்க்கும்
அவள் பெற்றோரின் பெற்றோர்.

                                                                  - ASH

Sunday, 5 August 2018

தன்னலம் அறியா உறவு (Friend- Pillar of life )

அன்பிற்கு அடையாளம் அம்மா.
அறிவிற்கு அடையாளம் அப்பா.
அரவணைப்பிற்கு அடையாளம் உடன்பிறப்பு.
நல்லொழுக்கத்திற்கு அடையாளம் கல்வி.
உணவுக்கு அடையாளம் உழைப்பு.
நம் இருவருக்கும் அடையாளம் நட்பு.


நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன் என்பார்கள்,
நண்பா நீ உன் உண்மையான அன்பைக் கொடுத்தால்
போதும் அதுவே உயிரைவிடவும் உயர்ந்ததாகும்,
ஏனென்றால் நீ இல்லா என் வாழ்க்கையானது
நீர் அற்றுத் தவிக்கும் மீனைப் போன்றதாகும்.
இப்படிக்கு நினைவில் உன்னைப் பிரியா உன் தோழன்.
                                                                                                   
                                                                                                       -ASH

மூன்றெழுத்து மந்திரம் (Three Letter Magic)

நம் வாழ்வில் அற்புதங்களை
நிகழ்த்தும் மூன்றெழுத்து மந்திரம்.
அம்மா, அப்பா, அறிவு, அன்பு, நட்பு.
இதில் இரண்டைத் தவிர அனைத்தும்
நமக்கு இறைவனால் வழங்கப்பட்டது.
அன்பு இது நம் மனதில் மலர்வது.
நட்பு அந்த மலரைப் பிறருக்கு,
கொடுப்பதால் நமக்குக் கிடைப்பது.
அன்பைக் கொண்டு நட்பை வெல்லலாம்.
நட்பைக் கொண்டு எதையும் வெல்லலாம்.
                                                                                        - ASH

அமுதின் சுவையை உணர்ந்தேன்

அமுதம் உண்பதை உணர்ந்தேன் 
என் தாயின் கைகளால் உருட்டி 
வழங்கிய உருண்டைச் சோற்றை 
சுவைத்து உண்டபோது. 
"இதை உணர்ந்தவன் தாயை 
உள்ளத்தில் தாங்குவான் 
உதறிவிடமாட்டான்".
                                                    - ASH

Friday, 3 August 2018

அறிந்து செயலாற்று

சினம் நம்மைச் சீரழித்துவிடும்.
பணம் நம்மைப் பைத்தியமாகிவிடும்.
ஆசை நம்மை அறிவிழக்கச் செய்துவிடும்.
வஞ்சம் நம்மை வழித்தவரச் செய்துவிடும்.
அறிவைக் கொண்டு இவற்றை அறியத்தவரினால்
அதுவே நம் வாழ்வின் அழிவுக்கு வழி வகுத்துவிடும்.
                                                                                                              - ASH

Wednesday, 1 August 2018

நன்மை பயக்கும் நட்பு (Beneficial Friendship)

நான் கீழே விழுந்தேன் என்னைத் தூக்கக் கைகொடுத்தாய் 
நான் அழுதேன் என் கண்ணீரைத் துடைத்தாய் 
நான் கவலையுற்றேன் சாய்ந்துகொள்ளத் தோள்கொடுத்தாய் 
நான் தோல்வியுற்றேன் மீண்டும் முயற்சிக்கத் தட்டிக்கொடுத்தாய் 
நான் வாழ்க்கை என்ற கடலில் தொலைத்துவிடாமல் இருக்க 
நீ கடற்கரை விளக்காய் வந்தாய் உன் ஒளிகொண்டு 
என் வாழ்க்கையை ஒளிபெறச் செய்தாய். 
நண்பா உன்னை நண்பனாய் பெற்றதில் எனக்குப் பெருமை 
உன் அளவற்ற அன்பிற்கு நான் என்றும் அடிமை.
                                                                                                                - ASH

பட்டாம்பூச்சியின் பாடம் (Butterfly's Lesson)

முட்டையை முட்டி இவ்வுலகில் பிறந்தேன்
ஊர்ந்துச் சென்று இலைத் தழைகளைத் தின்றேன்
பின்னர்ப் பரிணாம வளர்ச்சிபெற, நான் மேல்
ஓட்டினுள் அடைபட்டுப் பொறுமை காத்தேன்
அதன் பலனாக மேலுறை உடைத்துக் கொண்டு
அழகிய வண்ணத்துப் பூச்சியாகச் சிறகை விரித்து
எங்கும் பறந்து திரிந்தேன் உயிர் துறக்கும்வரை.

நான் பிறந்த தோற்றம் அருவெறுப்பைக் கொண்டாலும்
என் விடாமுயற்சிப் போராட்டம் பொறுமைக் காத்தல்
ஆகியவற்றைக் கடைப்பிடித்ததன் மூலமாகவே
நான் இறக்கும் முன் அழகிய தோற்றம் கொண்டேன்.

இந்தப் பட்டாம்பூச்சியின் வாழ்க்கை மனிதனின் தன்
வாழ்வில் முன்னேற ஓர் எடுத்துக்காட்டாகும்
விடாமுயற்சிப் போராட்டம் பொறுமை இவையே
வாழ்வின் தாரக மந்திரமாய்க் கொண்டு செயல்பட்டால்
யாவருக்கும் வெற்றி என்பது நிச்சயமே.

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)