Wednesday, 15 August 2018

காதல் என் பார்வையில்

காதல், இருள் நிறைத்த வாழ்வில்
ஒளி பொருந்திய முழு நிலவு, அது
நாளடைவில் தேய்ந்தாலும் மீண்டும் வளரக்கூடியது,
பொறுமையும் நம்பிக்கையுமே அதற்குத் தலைமையானது.
காதல், இருவர் மட்டும் வாழும் கனவு
உலகிற்க்கான நுழைவுச் சீட்டு.
காதல், ஈர் இதயத்தை இணைக்கும்
கண்கள் காணா வண்ணம் வரைந்த பாலம்.
காதல், இன்பத்தையும் துயரத்தையும்
அளவின்றி அள்ளி வழங்கும் கருவூலம்.
காதல், கண்களால் பேசச் செய்யும்
தந்திரத்தைப் புகட்டும் மந்திர எழுத்து.
காதல், உன்னில் என்னைக் கரையச் செய்யும்,
எண்ணில் உன்னை ஒளியச் செய்யும் ஒரு விந்தை.
காதல், இரு இதயம் மட்டுமே
உரையாட கூடும் அலைவரிசை
இடையூறு இதற்கு இல்லை.
காதல், இருயிர் இணைய அவற்றின்
உணர்வையே உணவாக கொண்டு
வளரும் சிம்பையொட்டிக்.

No comments:

Post a Comment

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)