Thursday, 19 July 2018

இளகிய இதயம் ( Heart of the Beast )

உனக்காக உயிர் துறந்தேன் 
என்னைக் கண்டு உன் உள்ளம் 
கலங்க நீ சிந்திய ஒரு துளி 
கண்ணீர் போதும் எனக்கு.
இதுவே இம்மிருகப் பிறவியின் 
பயன் என்றே என் முகத்தில் 
புன்னகைக் கொண்டு நான் 
கண்களை மூடுவேன், அன்பே 
நான் மனிதனாய் இம்மண்ணில் 
மீண்டும் பிறக்க ஆசை, அழகே 
உன் கைகளைப் பிடிக்க ஒரு
வாய்ப்புக் கிடைக்குமெனில்.
                                                             - ASH


I was died for you.
Your heart feels bad by looking at me
If you are teared a single drop from your eyes
That's enough for me in this beast birth
I will close my eyes with a smiling face
I wish to reborn as a human in case,
There is a chance to hold your hand.

Wednesday, 18 July 2018

தாயின் உள்ளம் (Mother's Heart )


என்னை மறந்து உன் அருகில் இருப்பேன்
கண்ணே! நீ உறங்கும் அழகை காணவே
என் தாய் உள்ளத்தின் முழக்கம் இது.
அக்கணம் என்னை விட்டு தள்ளியிருந்தால்
அவள் உள்ளம் நிம்மதியின்றி தவிக்கும்
என் உறக்கம் கலைந்துவிடுமோ என்றே.
                                                                                        - ASH


When I'm next to you, I shall forget myself
And watching you while you are sleeping
It's the words revolve in the mind of my mom.
At the moment while the infant sleeping
If the mother is not next to their infant
The mother's heart won't be in peace
And then she feels uneasiness in her heart
Because following words eats her mind
What shall i do? what shall i do?
If her infant sleep gets disturbed means.


Tuesday, 17 July 2018

உணவின் உயிர் விவசாயம் ( Food and Farmers)

மனிதா!
இயற்கையை அழிக்காதே
விவசாயியை ஒழிக்காதே
உயிர் வாழ உணவுத்தேவை
இதை நீ என்றும் மறக்காதே
அரசே!
உழவர்களின் வேண்டுகோளை
ஒருபோதும் மறுக்காதே
உன் மதியை இழக்காதே
மக்களை வதைக்காதே
இன்று சிந்திக்க மறந்தால்
நாளை என்றொன்று இல்லை.
                                                                  - ASH


Oh humans!
Don't destroy the nature
Don't eradicate the farmers
To live we need food
You don't forget it
Oh government!
Don't deny farmers
And their basic request
Don't loose your brain
Don't kill the people
By taking the wrong decision
Food can't be manufactured
It can be produced only by cultivation
That can be done only by farmers
If you don't think today then
There is no tomorrow for all of us

கனவோ என்றெண்ணிய நிஜம் ( Sweet Scenario )

இருளில் நிலவின் ஒளிக்கொண்டு பிரகாசிக்கும்
நட்சத்திரம் மண்ணில் நடந்துவந்ததோ என்றே
திகைத்து நின்றேன், அழகியே நீ இருளில்
விளக்கை கைகளில் ஏந்தி புன்னகையோடு
வருகின்ற காட்சியை காணும்போது.
                                                                            - ASH

In darkness the stars glitter in the moon light
I shocked and stunned  to see that the star
Which fall down and walked towards me
It looks like the same way that I imagined
you carried a lighted lamp in your hand
And walked towards me with a smile
In the darkness, this scene pierced through
My heart with a love arrow from your eyes

Monday, 16 July 2018

உனக்காக நான் (I'm for you)

நான் காற்றோடு கரைந்தாலும் நீ
சுவாசிக்கும்  காற்றாக இருப்பேன்.
நான் மண்ணோடு மறைந்தாலும் உன்
பாதம் தாங்கும் மண்ணாய் இருப்பேன்.
என் நினைவு உன்னை தொடரும்வரை
உன் நிழலாய் நான் இருப்பேன்.
நீ என்னை மறந்தாலும் அன்பே நான்
உன்னை பாதுகாக்க மறவரின்.
                                                                - ASH

Even though I'm turned into the air 
I will be the air that you are respired to live
Even though I'm fade away in the sand
I will be the sand that support your feet to walk
Until my remembrance follows you
I will be with you as your shadow
Even though you forget me by time, oh my dear!
I won't forget to protect you.

Saturday, 14 July 2018

காதலிக்கு ரோஜா (Rose to propose)

"அனைவரையும் ஈர்க்கும் ரோஜா பூவிற்கு
முட்கள் பாதுகாப்பாக இருக்கின்றது.
அந்த அழகிய ரோஜாவாக நீ இருக்க
நான் முட்களாக இருந்து என்றும்
உன்னை பாதுகாக்க சம்மதமா?"

ஒருவேளை ரோஜாவை கொண்டு காதலை
வெளிப்படுத்துவதற்கு காரணம் இதுதானோ?
                                                                                            - ASH

For the rose which attracts all
Thorns on stem is used to protect it 
If you are like that beautiful rose
Can I get a chance to be the thorns? 
To protect you for rest of my life


Oh! To say this, All persons give rose with thorns on stem to propose their lover ah?

Friday, 13 July 2018

என்னுள் ஒரு மாற்றம்

இரு கைகளை கொண்டு நீ
என்னை கட்டி அணைக்கும்
அத்தருணம் எனக்குள் ஒரு
வேதியல் மாற்றம் அது என்
உடலின் வெட்பத்தை கூட்டும்
இதயத்தின் துடிப்பை அதிகரிக்கும்
மூளையின் செயல் சம்பித்துபோகும்
உடலின் அணுக்கள் அதிர்த்துப்போகும்
இம்மாற்றம் என் மகிழ்ச்சியின் தோற்றம்.
"அன்பே இது உன்னோடு மட்டும்
இதில் இல்லை ஒரு மாற்றம்"
                                                                - ASH

Thursday, 12 July 2018

ஒரு சுகமான சூழல் உன்னோடு


இருள் அனுமதி கேட்க
ஒளி விடைதரும் மாலைநேரம்
ஈரம் சுமந்த இனிமையான காற்று
வானெங்கும் கார்மேகம் சூழ்ந்திருக்க
மின்னல் எட்டி பார்த்து செல்ல
இடைவிடா அலையின் ஓசை 
மஞ்சள் நிறச்சக்கரை போல் மணல்
என் அருகில் நீ! உன் அருகில் நான்!
கை கோர்த்து கண்கள் காதல் பேச
மழையும் வரும் நம்மை மகிழ்விக்க
மடிந்தாலும் மறையாது இந்நினைவானது
என் மனதில் என்றென்றும் நிலையானது
                                       - ASH

காலத்தை கடந்தது காதல் ( About Time - Part II )

என் ஆயுள் காலம் குறைந்தாலும் அன்பே
உன் அருகில் இருக்கவே ஆசை கொன்டேன்.
நீ என்னை விலகிச்சென்ற போதும் அன்பே
நான் உன்னை விரும்பி நெருங்கி வந்தேன்.
உன்னை மீட்டு கொண்டுவர மரணத்தின்
வாசலென்றாலும் நான் வருவேன் உனக்காக.
உன்னை நெருங்கிய மரணமும் நம் காதலை
கண்டு காணாமல் போனது, என் கண்னே.
இனி இனிதே என்று நம் வாழ்வில் இணைவோம்.
                                                                                                        - ASH

My dear even though my life time decreases
I'm always desired to stay near to you
My dear even though you run away
I'm always liked to get close to you
I will come for you to get you back
even though it is entrance to the death
After seen our love for each other
Death which tries to reach you is also gone 
And so we have to live together happily
Forever and ever in our life time 

Wednesday, 11 July 2018

Life's Lesson

To taste a win face a loss.

To taste a truth face a lie.

To taste a delightfulness face a bitterness.

To taste a cheer face a depression

Because of this, hard time will turn to good and won’t get bad again because you already know the magic to overcome such a hard time

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)