Tuesday, 18 September 2018

என் எழுத்தில் நீ ( My Words about You )

உன் கருவிழிக் கண்களை நினைத்தேன்
என் கனவுக்கன்னி நீயென உணர்தேன்.
உன் செவ்விதழினை நினைத்தேன்
என் தூக்கத்தைத் தொலைத்தேன்.
உன் நீண்டக் கூந்தலை நினைத்தேன்
கருநிற அருவியோ எனத் திகைத்தேன்.
உன் கம்மலிட்டக் காதுகளை நினைத்தேன்
என் ஆசையை உரைத்திடத் துணிந்தேன்.
மொத்தத்தில் நீ சேலை அணிந்து வந்த
என் தேவதை என்பதை நான் அறிந்தேன்.
உன் அழகின் நினைவு என்னைத் தட்டி எழுப்ப
என் கைகளில் காகிதமும் எழுதுகோலும் எடுக்க
உந்தன் அழகினைக் கவிதையாக நான் வடித்தேன்.
                                                                                                         - ASH

எண்ணில் நிறைந்த கடவுள் ( You Live in Me )

ASH

Monday, 17 September 2018

காதலில் காத்திருப்பதும் ஓர் சுகமே ( Waiting for Love is also a Boon )

நீ இல்லா இவ்வுலகம் உலகமாக இருக்காது
வெறும் உலோகமாகத்தான் இருக்கும்.
உன்னை நினைக்காத என் மனதானது மனமாக
இருக்காது மரமாகத்தான் இருக்கும்.
நீ இல்லா வாழ்க்கை வாழ்க்கையாக இருக்காது
உயிரற்றப் படுக்கையாகத்தான் இருக்கும்.
இருக்கும் இருக்கும் உன்னைக் காணவே என் கண்களும்
உன்னைச் சேரவே என் இதயமும் காத்திருக்கும்.
                                                                                                    - ASH

Recent Activity

அன்பே வாழ்க்கை (The Lies She Loved)